Owen, Robert (1771-1851)

ராபர்ட் ஓவன் (1771– 1858)

தமிழ் விளக்கம்

ராபர்ட் ஓவன் வேல்ஸ் சமூக சீர்திருத்தவாதியும் கற்பனாவாத சோசலிசம் (utopian socialism), கூட்டுறவு இயக்கம் (cooperative movement) ஆகியவற்றை உருவாக்கியவர்களில் ஒருவராவார். பெற்றோருக்குப் பிறந்த ஏழு குழந்தைகளில் ஆறாவது குழந்தையாகப் பிறந்தார். டேவிட் டேல் என்ற மில் உரிமையாளரின் மகள் கரோலின் டேலை திருமணம் செய்து கொண்ட பிறகு அந்த ஆலையின் மேலாளராகவும் பகுதி உரிமையாளராகவும் செயல்பட்டார். ஓவன் ஆலையின் நிருவாகத்தில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினர். டிரக் முறை எனப்படும் முறையை மேம்படுத்தி மொத்த விலையில் பொருட்களை வாங்கித் தொழிலாளர்களுக்குக் கொடுக்கும் கூட்டுறவு முறையை ஏற்படுத்தினார். தொழிற்புரட்சியால் ஒரு சிலரிடம் செல்வம் நிறையத் தேங்கிவிட்டதாகவும், அந்தச் செல்வத்தைக் கருவியாகக் கொண்டு பற்பல உழைப்பாளிகளால் உருவாகும் செல்வத்தை மேலும் மேலும் சிலர் உறிஞ்சிக் கொண்டிருப்பதாகவும், இதனால் பெருவாரியான மக்கள் ஒருசில முதலாளிகளின் அதிகாரத்திற்கும், அறிவீனப் போக்கிற்கும் அடிமையாக்கப்பட்டிருக்கிறார்களென்றும், இந்நிலை மாறவேண்டுமென்று ராபர்ட் ஓவன் பாடுபட்டார். திவாலானதால் வேலைக்கொட்டடிகளில் பணியாற்ற நிர்பந்திக்கப்பட்டவர்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்களின் வேலைச் சூழல் மேம்பட உழைத்தார். இங்கிலாந்தில் முதியோர் ஓய்வூதியம் மற்றும் நோய்க்கால உதவித் திட்டங்கள் அறிமுகமாகக் காரணமாயிருந்தார். பிறவிக்குணம் என்பதில் நம்பிக்கையற்றவர் ராபர்ட் ஓவன். ஒருவர் வளர்ந்த சூழ்நிலை மற்றும் தவறான வழி காட்டுதல்கள் காரணமாகவே மனிதர்கள் தவறு செய்கிறார்களென்றும், மனித நடத்தைகளுக்கு அவர்கள் வாழும் சூழ்நிலையே காரணமாதலால், மனிதன் மேம்பட அவன் வாழும் சூழ்நிலையை மாற்றவேண்டுமென்று விரும்பினார். ராபர்ட் ஓவன். தனது சமூக சிந்தனைகளையும், செயல்களையும், பொதுவுடமைத் தத்துவங்களையும் செயல்படுத்த நியூ லேனார்க்கில் மாதிரிக் குடியிருப்பை உருவாக்கினார். பின்னர் அமெரிக்காவிற்கு குடியேறியபோது நியூ ஹார்மனி என்ற குடியிருப்பை ஏற்படுத்தினார். நியூ லோனார்க் மற்றும் நியூ ஹார்மனி குடியிருப்புகளில் அறிமுகப்படுத்தப்பட்ட தொழில், வேளாண்மை, கூட்டுறவு முறை, சுகாதாரம், கல்வி முறை, மக்களுக்காக செயல்பட்ட அமைப்புகள், முறைகள் மக்களை ஆச்சரியத்தோடு பார்க்க வைத்தது. அதை முன்னுதாரணமாக வைத்து இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் பல இடங்களில் இதுபோன்ற குடியிருப்புகள் உருவாக ஆரம்பித்தது.

English

Welsh philanthropist and social advocate who worked toward elimination of exploitative working conditions for paupers and apprentices, improved child labor conditions, and aided in the establishment of national old-age and sickness insurance programs. He contended that behavior and character were wholly determined by environmental conditions and later established influential utopian communities known as Owenite societies. His son Robert Dale Owen emigrated to the United States, where he became a leader of the antislavery abolitionist movement.