Oxford Committee for Famine Relief (OXFAM)

பஞ்ச நிவாரணத்திற்கான ஆக்ஸ்போர்டு குழு

தமிழ் விளக்கம்

ஆக்ஸ்பார்ம் (OXFAM) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த அமைப்பு உலகெங்குமுள்ள ஆதரவற்ற வறியவர்களுக்கு, உணவு, உடை மற்றும் அவசர கால நிவாரணமளிக்க நிதிதிரட்டி தொண்டு செய்யும் சர்வதேசத் தன்னார்வத் தொண்டு நிறுவனம். உலகெங்கும் பேரிடர் நிவாரணம் வழங்கும் ஒருங்கிணைப்புக் குழுவில் அங்கம் வகிக்கிறது. பேரிடர் நிவாரணத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் நிவாரண அமைப்புடனும், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மைக்கான அமைப்புடனும், பிற தொண்டு நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றுகிறது.

English

An international voluntary nongovernment organization (NGO) based in London to raise and distribute funds and emergency supplies to those nations and peoples who lack sufficient food or nutrition to maintain quality life. OXFAM works with international relief organizations such as United Nations Disaster Relief Organization (UNDRO) and Food and Agricultural Organization (FAO) of the United Nations and with other private groups. It is a member of the Steering Committee for International Relief, which is the informal group of major relief agencies that coordinates disaster and famine relief.