Ozanum, Antoine Frederic (1813-1853)
ஓசோனம் அந்தோனி பிரடெரிக் (1813-1853)
தமிழ் விளக்கம்
ஓசோனம் அந்தோனி பிரடெரிக் (1813-1853) - அடிப்படையில் சமூக சீர்திருத்தவாதியான இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க மத நம்பிக்கையாளர். இவர் ஏழைகளுக்குப் பொருளாதார உதவி, வேலைவாய்ப்பு, உணவு, மருத்துவ உதவிகள் வழங்க முதலில் அறக்கட்டளை அமைப்பு ஒன்றைத் தொடங்கினார். பின்னர் அதை புனித வின்சென்ட் தே பவுல் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் பிறரன்பு அமைப்பாக, புனித வின்சென்ட் தே பவுல் சபை என்று மாற்றினார். இந்தச் சபை இன்று 132 நாடுகளில் செயல்படுகிறது. இவர் போப் ஜான் பால் II (Pope John Paul II) அவர்களால் கத்தோலிக்க மதத்தில் புனிதர் பட்டத்திற்கு இணையான ஆசீர்வதிக்கப்பட்ட ஆன்மா என்று கவுரவிக்கப்பட்டார்.
English
Social reformer and founder of the St. Vincent de Paul Society, he sought to develop a rational program for helping poor people in France while working as a university educator and lawyer. He established the nonsectarian Conference of Charity to provide financial relief, employment, food, and shelter for poor families. Later he renamed the organization St. Vincent de Paul Society after the 16th-century reformer who helped the poor and freed slaves and helped them establish new lives.