ozone layer

ஓசோன் படலம், ஓசோனடுக்கு, சாரலியம் / மிகுவுயிரகப் படலம்

தமிழ் விளக்கம்

ஓசோன் படலம் (Ozone layer) என்பது, பூமியின் வளிமண்டலத்தில் ஒப்பீட்டளவில் உயர் செறிவுடைய ஓசோனைக் (O3) கொண்ட ஒரு படலம் ஆகும். பூமியில் வாழ்பவர்களுக்கு கேடுவிளைவிக்கக் கூடிய சூரியனின் புறஊதாக் கதிர்களை, 93% முதல் 99% வரை உட்கிரகிக்கிறது. பூமிக்கு மேல் தோராயமாக 10 கிமீ முதல் 50 கிமீ வரையுள்ள தொலைவில் உள்ள ஸ்ட்ரேடோஸ்பியர் என்ற வளிமண்டலத்தின் கீழ்ப்பகுதியில் தான் 91%க்கும் மேல் ஓசோன் இருக்கிறது. எனினும் பருவநிலை மற்றும் புவியியல் சார்ந்து அதன் அடர்த்தி இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. 1913 ஆம் ஆண்டு பிரஞ்சு இயற்பியல் வல்லுநர்கள் சார்லஸ் ஃபேப்ரி (Charles Fabry) மற்றும் ஹென்றி புய்சன் (Henri Buisson) ஆகியோரால் ஓசோன் படலம் கண்டறியப்பட்டது. இதன் பண்புகள் பிரிட்டிஷ் வானியல் நிபுணர் ஜி. எம். பி. டோப்சனால் (G. M. B. Dobson) விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இவர் எளிமையான ஸ்பெக்ட்ரோபோட்டோமீட்டரை (டோப்சோன்மீட்டர்) உருவாக்கினார். அதனை நிலத்தில் இருந்து வளிமண்டல ஓசோனை அளவிடுவதற்குப் பயன்படுத்தலாம். 1928 மற்றும் 1958 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஓசோன் கண்காணிப்பு நிலையங்களின் நெட்வொர்க்கை உலகளாவிய அளவில் டோப்சன் நிறுவினார். அது தற்போதும் தொடர்ந்து இயங்குகிறது. டோப்சனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஓசோன் மேனிலையின் கனப்பட்டை அடர்த்தியின் (columnar density) ஏற்ற அளவீட்டிற்கு 'டோப்சன் அலகு' எனப் பெயரிடப்பட்டது.

English

A zone of ozone gas in the atmosphere between 10 and 30 miles above earth, which absorbs much solar ultraviolet rays that would otherwise harm life on the planet. Some scientists believe various manufactured chemicals are depleting this layer.