pacifism

அமைதிவாதம், போரொழிப்புக் கோட்பாடு, போர், வன்முறை இவற்றை எதிர்க்கும் கொள்கை, பிரச்சினைகளைப் போரின்றித் தீர்ப்பது, போரொழிப்பு விரும்பத்தக்கதென்றும், நடைமுறைப்படுத்தத் தக்கதென்னும் கோட்பாடு

தமிழ் விளக்கம்

அர்னாடு எமில் என்ற பிரஞ்சு சமாதானப் பிரச்சாரகரால் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தை, 1901 இல் கிளாஸ்கோவில் நடந்த பத்தாவது உலக அமைதி நாட்டில் சர்வதேசப் பயன்பாட்டிற்கு வந்தது. மனிதர்களிடமும், நாடுகளிடமும் உள்ள பிணக்குகளை அமைதியான வழிமுறைகளைக் கையாண்டு தீர்த்துக்கொள்ள முடியும் என்று அமைதிவாதிகள் நம்புகிறார்கள். அமைதிவாத, போரொழிப்புக் கோட்பாட்டுச் செயல்பாடுகளில் சமூகப்பணியாளர்கள் எப்போதும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த வார்த்தையைப் பிணக்குகளை அதன் போக்கில் தீர்வுக்கு விட்டு செயல்படாதிருக்கும் நிலையுடனோ, முரண்டு பிடிப்பவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சிகளுடனோ ஒப்பிடமுடியாது. அமைதிவாதம் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான முன்முடிவுகள் எடுப்பதிலும், அதற்கான மாற்று வழிகளைக் கையாள்வதிலும் முனைப்புடன் செயல்படும்.

English

The value orientation or policy of universal peace and the resolution of all differences between nations by peaceful means. Historically, pacifism movements have been well represented by social workers. The term is sometimes confused with passivism (the passive unwillingness to negotiate differences; appeasement), but "pacifism" implies a much more active effort to find solutions that are alternatives to war. See also militarism and warism.