pain disorder
வலியினால் ஏற்படும் சீர்கேடு, வலியினால் ஏற்படும் துன்பம், வலியினால் ஏற்படும் தடுமாற்றம்
தமிழ் விளக்கம்
உடலின் ஒரு குறிப்பிட்ட உறுப்பிலோ அல்லது பாகத்திலோ, அல்லது உடல் மண்டலத்திலோ (ஜீரண மண்டலம், நரம்பு மண்டலம்) அல்லது உடல் முழுவதும் தொடர்ந்தோ, விட்டுவிட்டோ மருத்துவ ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ உணரப்படும் துன்பம் தரும் உணர்வு. வலி என்பது மருத்துவக் காரணத்தாலோ அல்லது உளவியல் காரணத்தாலோ வருவதால் அதற்கான வியாதி நிர்ணயம் அல்லது குணங்குறி மூலம் நோய் கண்டறியப்பட்டால்தான், அந்த வலிக்குப் பெயரிடப்பட்டு, சிகிச்சையளிக்க முடியும். இல்லையென்றால் உளவியல் காரணங்களோடு சம்மந்தப்பட்ட வலி என்றோ அல்லது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொடர்பு கொண்ட வலி என்றோ பொதுவாகத்தான் குறிக்கமுடியும். கடந்த காலத்தில் இதை உளவியல் காரணத்தால் உடலில் ஏற்பட்ட வலி என்று அழைத்தனர்.
English
A medical and psychological condition in which the predominant symptom is continuous, recurrent, or intermittent sensations of pain, either localized in specific parts of the body or body systems or generalized throughout. Because pain is usually symptomatic of a medical condition or mental disorder, the relevant diagnosis is of that disorder. Otherwise, the formal diagnosis would be "pain disorder associated with psychological factors" or "pain disorder associated with both psychological factors and a general medical condition." The former term was psychogenic pain disorder.