panacea

அனைத்து நோய்க்கான மருந்து, சர்வரோக நிவாரணி, சஞ்சீவினி, அமிர்த சஞ்சீவி

தமிழ் விளக்கம்

Panacea என்ற சொல், எல்லா நோய்களையும் குணப்படுத்தவல்ல கிரேக்கத் தேவதையைக் குறிக்கும். இவர் ஆசிலிபியஸ் - எபியோன் (Asclepius and Epione) என்ற தெய்வங்களின் மகளாவர். இவளுடன் பிறந்தவர்கள் நான்கு சகோதரிகள் 1.சஞ்சீவினி (panacea) (எல்லா நோய்களையும் தீர்க்கும் தெய்வம்), 2. ஹைஜிய (Hygieia) (ஆரோக்கியம் தரும் தெய்வம்), 3.லாசோ (Iaso) (நோயிலிருந்து மீண்டெழ வைக்கும் தெய்வம்), 4. ஆசோ (Aceso) (குணமாக்கும் தெய்வம்), 5. அக்லெய (Aglæa / Ægle) (தோற்றப்பொலிவைத் தரும் தெய்வம்). சில திட்டங்களைப் பற்றி உயர்வாகப் பேசும்போது அது எல்லாவற்றிற்கும் தீர்வு தராது என்ற அர்த்ததில் 'no panacea' என்ற இச்சொல்லைச் சமூக விமர்சகர்கள் பயன்படுத்துவார்கள்.

English

A cure-all; a plan that would solve all problems. Often opponents of a social reform movement deride the plan as "no panacea" because it hopes to solve only part of a problem.