panic attack
வியர்த்தல், படபடப்பு, நடுக்கம், குமட்டல், உடல் ஜில்லிட்டுப்போதல், தலைசுற்றல், உணர்விழத்தல், பயவுணர்வு, சுயகட்டுப்பாடிழத்தல், பைத்தியம் பிடிப்பது போலிருத்தல், மரணபயம் போன்ற அறிகுறிகளுடன் திடீரென்று தோன்றும் பீதி மற்றும் அச்சம்
தமிழ் விளக்கம்
இந்த மாதிரியான பீதி உணர்வு தீடீரென்று தோன்றி ஓரிரு நிமிடங்களில் உச்ச நிலையை அடையும். இந்த பீதி உணர்வு கவலையாலும், பதட்டத்தாலும் உருவாகிற பலவகையான திடீர் உளக் கோளாறுகளான அதிர்ச்சிக்குப் பின்னான மனத்துயரம் (post traumatic stress disorder (PTSD), கடுமையான நெருக்கடி நிலை (acute stress disorder) உருவாக்கும் மனத்துயரம் போன்ற நேரங்களில் உருவாகும். இது எந்தவித முன் தொடர்பற்ற, முன்நிகழா எதிர்பாராத தூண்டல்களிலிருந்தோ அல்லது நடக்கவிருப்பதாக எதிர்பார்த்த தூண்டல்களிலிருந்தோ இந்த பீதி உணர்வு உருவாகலாம்.
English
The sudden onset of intense fear and anxiety, usually accompanied by such symptoms as sweating; palpitations; tremor; nausea; chills; dizziness; derealization; and fears or feelings of losing control, going crazy, and dying. The attack occurs suddenly and builds to a peak within a few minutes. It occurs in several types of anxiety disorders, including panic disorder, social phobia, specific phobia, posttraumatic stress disorder (PTSD), and acute stress disorder. Onset of the attack may be unexpected with no particular stressor (uncued), or it may occur almost always when confronted by or in anticipation of a stressor (cued). Panic attacks may also be situationally predisposed, in which the attack is more likely but not invariably going to happen when confronted by or in anticipation of a stressor.