panic disorder

பீதியினால் ஏற்படும் சீர்கேடு

தமிழ் விளக்கம்

எந்தவிதமான அச்சுறுத்தும் காரணிகள் / தூண்டல்கள் இல்லாதபோதும், அதீத பதட்டம் அல்லது கவலையால் அடிக்கடியோ அல்லது ஒரு மாதத்திற்கும் அல்லது அதற்கும் மேலாகவோ தொடர்ந்து ஒன்றைப்பற்றி நினைத்து பீதி உணர்வு கொண்டிருப்பது. இதனால் மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம், இதயப் படபடப்பு, நெஞ்சடைத்தல், வியர்த்தல், நடுக்கம், தலைசுற்றல், மயக்கமாதல் போன்ற உபாதைகளை அனுபவித்தல். சில சூழ்நிலைகளில் தங்களுக்குப் பீதியுண்டாக்கும் என்று எதிர்பார்த்ததாலோ அல்லது ஏற்கனவே தாங்கள் பீதியடைந்த பழைய சம்பவங்களை மீண்டும் எதிர்கொள்ளும் போதோ, மனிதர்கள் தங்களை அறியாமல் பீதிக்குள்ளாவதுண்டு. எடுத்துக்காட்டாக, பழக்கமில்லா இடங்களைப் பற்றிய பீதி அல்லது திடல் மருட்சி கொண்டவர்கள் கூட்டமான இடங்களைக் கண்டோ அல்லது திறந்த வெளியைக் கண்டோ சட்டென்று பீதிக்குள்ளாவார்கள்.

English

An anxiety disorder characterized by recurrent panic attack or fear of having further panic attacks for more than one month over an extended period in situations in which there is no life-threatening stressor. Symptoms include choking and breathing difficulties, palpitations and chest pains, sweating, trembling, dizziness, and faintness. Often the individual anticipates the onset of such attacks and becomes fearful of situations in which such attacks previously occurred. Abnormal avoidance of these places may be diagnosed as "panic disorder with agoraphobia."