paradigm
கருத்தோட்டம், உதாரணம், மேற்கோள் சூத்திரம், எடுத்துக்காட்டு, முன் உதாரணம்
தமிழ் விளக்கம்
அறிவியலாளர்களால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தோட்டம் / முறை / மாதிரி / வடிவமைப்பு. இந்த அறிவியல் முறையைப் பயன்படுத்தியே ஊகிப்பதும், அதனடிப்படியில் தரவுகள் சேகரிகிக்கப்பட்டு கோட்பாடுகள் நிரூபிக்கவும் படுகின்றன. எடுத்துக்காட்டாக மனிதர்களின் நடத்தையை அவர்கள் பிறருடன் கொள்ளும் உறவாடலே தீர்மானிக்கின்றது என்பது சமூக உளவியலின் அடிப்படைக் கருத்தோட்டம். கருத்தோட்டம் / எடுத்துக்காட்டு என்பது பொதுவாகக் கீழே கண்ட இலட்சணங்களைக் கொண்டிருக்கும். 1. கருத்தோட்டம் என்பது ஒன்றை முரண்பாடுகளின்றி, குழப்பமின்றிப் புரிந்துகொள்ள உதவும் முறை. 2. நாம் ஒன்றிலிருந்து எதை எதிர்பார்க்கலாம், எதிர்பார்க்கலாகாது என்பதற்கான வழிகாட்டி 3. தகவல்களை / தரவுகளைத் திரட்ட, வகைப்படுத்த, தொகுக்க உதவும் முறை 4. நாம் என்னென்ன கேள்விகளைக் கேட்கலாம், கேட்கலாகாது என்பதை தீர்மானிக்கும் 5. கருத்தோட்டம் என்பது இதுவரை திரட்டப்பட்ட அறிவு, அனுபவம் மற்றும் நம்பிக்கைகளின் தொகுப்பு.
English
A model or pattern containing a set of legitimated assumptions and a design for collecting and interpreting data. For example, the psychosocial paradigm begins with an assumption that behavior is determined largely through learning the experiences of interpersonal relationships.