paradoxical directive

முரண்பாடுபோல் தோன்றும் அறிவுரை, புரிந்துகொள்ள முடியாத வழிகாட்டல், முரணுரை போலத் தோன்றும் அறிவுரை, ஏற்றுக்கொள்ளப்பட்ட இயல்புக்கு மாறான அறிவுரை

தமிழ் விளக்கம்

சில குடும்பச் சிகிச்சை முறைகளில் சமூகப்பணியாளரோ, பிற சிகிச்சையாளரோ பிரச்சனைக்குக் காரணமான நடத்தைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்குமாறோ அல்லது அத்தகைய நடத்தைகளை மேலும் வலுப்படுத்துமாறோ கொடுக்கும் அறிவுரை. இது முரண்பட்டது போலிருந்தாலும், அதன் பின்னணி உண்மையை அறியவரும்போது, வாடிக்கையாளர்களுக்கு தாம் என்ன செய்கிறோம் என்ற புரிதல் ஏற்பட்டு அந்த நடத்தைகளைத் திறனுடன் கையாளக் கற்றுக்கொள்வர்.

English

In certain types of family therapy, an approach in which the social worker or other therapist tells the family members to continue their symptomatic behavior and sometimes to "improve on it." This makes them more aware of the existence of the behavior and the gains they derive from it and finally gives them more control over it.