paranoia

சந்தேகப்படும் மனக்கோளாறு, ஐயுறு மனக்கோளாறு, அவநம்பிக்கைக் கோளாறு, திரிபுணர்வு துன்புறு மனநோய், அறிவுப் பிறழ்ச்சி, தருக்கியல் சித்தப்பிரமை

தமிழ் விளக்கம்

பயத்தாலும் பதட்டத்தாலும் மற்றவர்கள் மீது ஆதாரமற்று சந்தேகப்படுவது அல்லது அவர்களுடைய செயல்களுக்கு உள்நோக்கம் கற்பிப்பது. தம்பதியர் மீது சந்தேகப்படுவது (conjugal paranoia), சிற்றின்ப நினைவுகளால் ஏற்படும் மயக்க வெறிச் சோர்வு (erotomania), தன் உடல் நலத்தைப் பற்றிக் கவலை கொள்ளும் தன்மையால் ஏற்படும் மனவாட்டம் (hypochondriacal paranoia) போன்றவை சில உதாரணங்கள்.. இது சாதாரண பயஉணர்விலிருந்து (phobia) மாறுபட்டது. காரணம் பய உணர்வுகள் தன்னிச்சையானது. இந்தக் கோளாறுள்ளவர்கள் மற்ற விசயங்களில் தெளிவான சிந்தனைப் போக்கு கொண்டிருப்பார்கள். இந்த சந்தேகக் கோளாறு தொடரும் பட்சத்தில் அது சந்தேக ஆளுமையாகவும், அதைத் தொடர்ந்து சந்தேகத்தினால் மனச் சிதைவும் ஏற்படும்..

English

A symptom of mental disorder whose most prominent characteristics are permanent and unshakable suspiciousness and persecutory delusion but in which the individual is otherwise clear thinking. Paranoia is a prominent feature of persecutory- type delusional disorder, paranoid schizophrenia, and paranoid personality disorder.