paranoid personality disorder

சந்தேக ஆளுமைக் கோளாறு

தமிழ் விளக்கம்

பதினொரு வகையான ஆளுமைச் சிக்கல்களில் சந்தேக ஆளுமைக் கோளாறு ஒருவகை. மற்றவர்கள் மீது காரணமின்றி பொதுவாகக் கொண்டிருக்கும் சந்தேகமும் அவநம்பிக்கையுமே இதன் அறிகுறிகள். இவர்களால் மற்றவர்களை நம்பவோ அல்லது நெருக்கமாகவோ இருக்கமுடியாது. தங்களைப் பற்றிய எந்தத் தகவல்களையும் பிறருடன் பரிமாறிக் கொள்ளமாட்டார்கள். தங்களுக்கு உரிய மரியாதை செலுத்தவில்லை, அவமானப்படுத்தி விட்டார்கள் என்று மற்றவர்கள் மீது கசப்புணர்வுடனும், காழ்ப்புணர்ச்சியோடும், கற்பனையாக எண்ணிக்கொண்டு அவர்கள் மீது வஞ்சம் பாராட்டுவார்கள். தங்களுக்கு எதிராக மற்றவர்கள் சதிசெய்கிறார்கள் என்ற எண்ணத்தால் அதற்கான ஆதாரங்களைத் தேடுவதில் அதிக நேரம் செலவழிப்பார்கள். தங்களுடன் உறவுகொண்டிருக்கும் நபர்களின் (தம்பதியினர், குழந்தைகள், பெற்றோர், நண்பர்கள்) விசுவாசத்தை, நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவார்கள்.
பதினொரு வகையான ஆளுமைச் சிக்கல்களாவன 1. சந்தேக ஆளுமை (Paranoid personality disorder) , 2. மனப்பிளவு ஆளுமை (Schizoid personality disorder), 3.மிகு மனப்பிளவு ஆளுமை (Schizotypal personality disorder), 4. சமூகவிரோத ஆளுமை (Antisocial personality disorder), 5. ஸ்திரமற்ற ஆளுமை (Borderline personality disorder), 6 நாடகப்பங்கான ஆளுமை (Histrionic personality disorder), 7. தற்பூசனை (தற்காதல்) ஆளுமை (Narcissistic personality disorder), 8. தவிர்க்கும் ஆளுமை (Avoidant personality disorder), 9. சார்ந்திருக்கும் ஆளுமை (Dependent personality disorder), 10. அலைபாயும் ஆளுமை (Obsessive-compulsive personality disorder), 11.நோயினால் ஏற்படும் ஆளுமை மாற்றம் (Personality change due to another medical condition), 12. மேற்சொன்ன எந்த வகையிலும் அடங்காத ஆளுமை (Personality disorder not otherwise specified).

English

One of the 11 types of personality disorders, characterized by pervasive distrust and suspiciousness of others. These people rarely become close to others or confide in them, often refuse to disclose personal information to anyone, bear grudges, and retain hostile feelings over imagined insults and slights. They devote time to gathering evidence of the malevolence of others and often question the loyalty, fidelity, or intentions of spouses, family members, or others. The condition differs from paranoid schizophrenia or delusional disorder of the persecutory type in that they include psychotic symptoms such as delusion and hallucination.