paranoid schizophrenia
ஐயுறவுக் மனக் கோளாறால் ஏற்படும் மனச்சிதைவு
தமிழ் விளக்கம்
படு ஐயுறவுநாட்பட்ட சந்தேகக் கோளாறுகள், அவநம்பிக்கை சிறிது சிறிதாக சிந்தனையைப் பாதித்து மனச் சிதைவிற்கு கொண்டுசெல்லும். மனச்சிதைவு நோயில், நோயாளர்கள் தங்களது நுண்ணறிவுத் திறனை முழுக்க இழந்து விடுவதால், நோய் ஏற்பட்டுள்ளது என்பதைக்கூட அவர்களால் அறிய முடிவதில்லை. மனச் சிதைவு நோயில் பலவகையுண்டு. ஐந்து வகையான மனச் சிதைவு (schizophrenia) நோய்களில் - 1. உணர்விழப்புடன் கூடிய மனச்சிதைவு (catatonic schizophrenia) என்பது ஒரு வகை 2..Paranoid schizophrenia: கருத்துத் திரிபு மனச்சிதைவு, பிறர் மீது நம்பிக்கையில்லாததோடு அவரைக்கண்டு அஞ்சுகின்ற மனச்சிதைவு, வளரும் உளச்சிதைவு, 3. Disorganized schizophrenia: ஒழுங்குமுறையற்ற மனச்சிதைவு 4.Undifferentiated schizophrenia: வகைபடுத்தமுடியாத மனச்சிதைவு 5. Residual schizophrenia: தேங்கி விட்ட மனச்சிதைவு). மனச் சிதைவு நோயில் .உள ஆற்றற் செயல்பாடும், உள ஆற்றலால் தசைப்பகுதி இயங்குவித்தலில் குறைபாடும் ஏற்படுவதால், உடலை இயக்கமுடியாமை அல்லது விரைவான இயக்கம், பிறர் சொன்ன சொற்களை அப்படியே பின்பற்றிச் சொல்லுதல், பிறர் செய்வதை அப்படியே செய்துகாட்டுதல், பொருத்தமற்ற உடலிருக்கை நிலை (அங்கஸ்திதி), தீவிர எதிர்மறைத் தன்மை மற்றும் ஊமைத்தன்மை போன்ற அறிகுறிகள் தென்படும்.
English
Technically known as "schizophrenia, paranoid type," one of the five major subtypes (also including disorganized, catatonic, undifferentiated, and residual) of schizophrenia, characterized by prominent delusions of persecution or delusions of grandeur and auditory hallucination.