paraphrasing

பொழிப்புரை

தமிழ் விளக்கம்

ஏற்கெனவே சொல்லப்பட்ட ஒன்றை எளியமுறையில் அதன் பொருள் மாறுபடாவண்ணம் எடுத்துச் சொல்வது. சமூகப்பணியாளர் தன்னுடைய வாடிக்கையாளருடன் மேற்கொள்ளும் உரையாடலின் போது, வாடிக்கையாளர் சொன்ன செய்திகளில் / கருத்துக்களில் முக்கியமானவற்றைத் தொகுத்து 'இதைத்தானே சொல்ல வருகிறீர்கள்' என்று சுருக்கமாகச் சொல்லி, வாடிக்கையாளரின் ஒப்புதலைப் பெறஉதவும் முறை. இந்த முறை, தான் சொல்லியதை சமூகப்பணியாளர் சரியாகப் புரிந்துகொண்டார் என்ற நம்பிக்கையை வாடிக்கையாளரிடம் ஏற்படுத்தும்.

English

A technique used in a social work interview in which the social worker expresses the idea of what the client has just said so that the relevant points are pulled together and emphasized. This helps clients clarify their own thoughts and assures them that the social worker understood the message.