paraphrenia
உள நோயைக் குறிக்கும் பொதுச் செயல், வற்றுளம், வளரும் உளக்கோளாறு
தமிழ் விளக்கம்
Paraphrenia (para - paranoid + phrenia - schizophrenia) முதிய வயதில் வரும் சந்தேக மனச்சிதைவு. இதன் தாக்கம் சந்தேக மனச்சிதைவைப் போன்று கடுமையாக இருக்காது. செயலிழப்பை உருவாக்கும் சித்தப் பிரமை மற்றும் ஆளுமைச் சீர்கேடு குறைந்த அளவில் தென்படும். இந்த வார்த்தையை ஐரோப்பிய மனநல மருத்துவர்கள் அதிகமாக உபயோகிக்கின்றனர். மாறாக அமெரிக்க மனநல மருத்துவர்கள் சந்தேகத்தால் ஏற்பட்ட சித்தப்பிரமை நிலைகுலைவையும், மனச்சிதைவையும் குறிக்க இதைப் பயன்படுத்துகின்றனர்.
English
Late-onset psychosis, a disorder whose symptoms begin in older people and resemble those of paranoid schizophrenia, except there is a minimum of debilitating hallucination and personality disorganization. The term is more commonly used among European psychiatrists and less so in the United States, where for many years it was incorrectly used as a synonym for delusional (paranoid) disorder and schizophrenia.