parapraxis
நாச் சோர்வு, எதிர்பாராத பிழை, கவனக்குறைவால் ஏற்படும் பிழை, பிராய்டின் வழுக்கல், ஆழ்மன வெளிப்பாடு
தமிழ் விளக்கம்
கவனக் குறைவினால் பேச்சிலோ அல்லது எழுத்திலோ ஏற்படும் தவறு. இதன் மூலம் ஒருவரின் ஆழ்மன உணர்வுகள் வெளிப்படுவதால் இதைப் பிராய்டின் வழுக்கல் அல்லது நாத்தடுமாற்றம் என்றும் கூறுவர். எடுத்துக்காட்டாக முதியோர் உதவித் தொகை திட்டப் பரிசீலனைக்கான வருபவரிடம், தன்னுடைய வயது 58 என்றாலும், கவலையினாலும், ஆதவற்றிருப்பதாலும் தன்னை எல்லோரும் 68 வயதிற்கு மேல்தான் கணிப்பார்கள் என்று அவரையுமறியாமல் உண்மையைப் பேசுவது.
English
Informally known as a Freudian slip; an error in verbalization that, according to Sigmund Freud (1856-.1939), reveals what is in the subject's unconscious. For example, a client who fears that a social work investigator is going to reduce some welfare benefit refers to him or her as the "social worrier."