parapsychology
விளக்கம் கடந்த மனோதத்துவம், இயல்பாகச் செய்யமுடியாத (இயற்பியல் விதிமுறைகளுக்கு உட்பட்டு) செயல்களை மன ஆற்றலால் செய்துகாட்டும் உளவியல்
தமிழ் விளக்கம்
அமானுஷ்ய உளவியல், ஆன்மிக உளவியல், குறிசொல்லியல், விளக்கத்திற்கு உட்படாத உளவியல், குறி சொல்லுதலைப் பற்றி ஆயும் உள நூற் பிரிவு, அமானுஷ்ய சக்தியை பற்றி ஆராயும் உளவியல்.
அறிவியல் பூர்வமாக விளக்கம் தரமுடியாத அமானுஷ்ய நடத்தைகள் மற்றும் மனோசக்தி பற்றி ஆராயும் உளவியல். இதனுள் மாற்றார் உளம் அறியும் சிறப்பாற்றல் (சேணிலை உணர்வாட்சி, தொலைவிலுணர்தல் (telepathy), ஐம்புலத் தொடர்பின்றியே தொலைவிலிருப்பதை உணரும் திறன், புலன்புறத்தெரிவு (extrasensory perception (ESP), உள்ளுணர்வு (intution), முன்னறிதல் (precognition), புலனாகாதவற்றைக் காணும் ஆற்றல், இயல்பு கடந்த நுண் நோக்காற்றல். தீர்க்கதரிசனம், ஞானதிருஷ்டி, வருவதுனரும் திறன், முற்பிறவி நினைவுகளை அறியும் திறன் போன்றவை அடங்கும்.
ஆன்மிக உளவியல் (Parapsychology) என்பது இயல்பு கடந்த, உள (ஆன்மீக) இயல் நிகழ்வுகள் பற்றிய கற்றல்சார் துறையாகும். தொலை நுண்ணுணர்வு, முன்னறிவு, மனக்கண் தொலைக்காட்சி, தொலைவிலுள்ள பொருள்களைத் தொடாமல் நகர்த்தல், மரணத்திற்குக்கிட்டிய அனுபவம், மறுபிறப்பு, அவியுரு அனுபவம் மற்றும் பிற இயல்பு கடந்த விடயம் பற்றி ஆன்மிக உளவியலாளர்கள் ஆராய்கிறார்ககள். ஆன்மிக உளவியல் ஆய்வுகள் தனியார் அன்பளிப்புக்களின் பண உதவியினால் பெரிய அளவில் நடத்தப்படுகின்றன.

English
A field of study that investigates paranormal behavior and psychic events that are not explained through the scientific method, including mental telepathy, extrasensory perception (ESP), intuition, precognition, clairvoyance, and memory experiences of being in other worlds or generations.