parasomnia
தூக்கச் சீர்கேடு, பிறழ்வுறக்கம்
தமிழ் விளக்கம்
தூங்க முயலும் போதும், தூக்கத்தின் போதும், தூங்கி விழித்தெழும் போது மன ரீதியாகவோ, உடலியல் ரீதியாகவோ ஏற்படும் விரும்பத்தகாத சம்பவங்கள். இவை கனவாகவோ, அசாதாரணமான உடலியக்கங்களாகவோ, நடத்தையாகவோ, தூக்க உரையாடலாகவோ, உணர்வு வெளிப்பாடாகவோ இருக்கலாம். இந்தத் தூக்கச் செயல்களைப் பார்ப்பவர்களுக்கு, இது குறிக்கோளுடன் செய்யப்படுவதாகத் தோன்றலாம். ஆனால் தூங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு அதைப்பற்றிய பிரக்ஞை ஏதுமிருக்காது. விழித்தெழுந்தபின் அதைப்பற்றிய நினைவுகள் ஏதுமிருக்காது கொடுங்கனவுகள், தூக்கத்தில் நடத்தல், பயத்தினால் படுக்கையில் சிறுநீர் கழித்தல், தூக்கத்தில் பேசுதல், தூக்கத்தில் ஏற்படும் மனத்தோற்றம் (சத்தம் அல்லது காட்சி தெரிவது போன்ற தோற்றம்), தூக்கத்தில் செயலழித்தல் போன்றவை தூக்கச் சீர்கேட்டின் அறிகுறிக்களாகும்.
English
A primary sleep disorder in which psychological or physiological events occur during sleep or during transitions from sleeping and awakening. Cognitive, motor, and autonomic nervous system (ANS) processes are activated during sleep stages in these disorders resulting in specific types of parasomnia including nightmare disorder, sleep terror disorder, and sleepwalking disorder.