parent self-help associations
பெற்றோர் சுயஉதவி அமைப்புகள்
தமிழ் விளக்கம்
பெரிய குடியிருப்புகளில் வசிக்கும், தங்கள் குழந்தைகளைக் கையாள்வதில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பெற்றோர்கள், தங்களுக்குள் பரஸ்பரம் உதவிக்கொள்ள ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள். கருணைமிக்க நண்பர்கள் (Compassionate Friends), கொலையான குழந்தைகளின் பெற்றோர்களுக்கான அமைப்பு (Parents of Murdered Children), துக்கத்திலிருக்கும் பெற்றோர்களுக்கு உதவும் அமைப்புகள் (HOPING - Helping Other Parents in Normal Grieving), மற்றும் கர்ப்பஸ்திரிகளுக்கும், சிசுக்களை இழந்த பெற்றோருக்கான அமைப்பு (SHARE for pregnancy and infant loss support) போன்ற பலநிருவனங்கள் இம்மாதிரியான சுய உதவி முயற்சிகளில் பங்கெடுக்கின்றன. தேசிய பெற்றோர் சங்கம் (National Parents Association), பெற்றோருக்கு உதவும் பெற்றோர்கள் அமைப்பு (Parents Helping Parents), துணையற்ற பெற்றோர்கள் அமைப்பு (Parents Without Partners - PWP), உறுதியான அன்பிற்கான சர்வதேச அமைப்பு (ToughLove International), மணமாகாத பெற்றோருக்கான அமைப்பு (Unwed Parents Anonymous), பாதுகாப்பற்ற தாய்மார்கள் அமைப்பு (Mothers Without Custody) போன்ற நிறுவனங்கள் குழந்தைகளைக் கையாள்வதில் பெற்றோர் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் உதவுகின்றன.
English
Private voluntary organizations in most larger communities comprised of parents who have experienced difficulties dealing with their children and who provide one another with mutual support. Some organizations of this type help parents deal with the death of their children, including The Compassionate Friends, Parents of Murdered Children, HOPING (Helping Other Parents in Normal Grieving), and SHARE (for pregnancy and infant loss support). Other parent self-help groups focus on dealing with the problems of child rearing, such as National Parents Association, Parents Helping Parents, Parents Without Partners (PWP), ToughLove International, Unwed Parents Anonymous, and Mothers Without Custody.