parental responsibility
பெற்றோர் பொறுப்பு
தமிழ் விளக்கம்
தங்கள் பாதுகாப்பில் வளரும் ஒவ்வொரு குழந்தைக்கும், சட்டரீதியாக, தார்மீக ரீதியாக, நெறிமுறை சார்ந்து, குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் வளர்ச்சி தொடர்பாக, ஒவ்வொரு பெற்றோரும், பாதுகாவலரும் செய்யவேண்டிய பொறுப்புகள். ஒவ்வொரு குழந்தையும் முழுமையான மனிதனாகவும், முன்னுதாரன நபராக வாழவும் குழந்தைக்குப் போதுமான ஊட்டச் சத்துள்ள உணவளித்தல், பாதுகாப்பான தங்குமிடமளித்தல், உடல் மற்றும் மன ரீதியான தீங்குகளிலிருந்து பாதுகாப்பளித்தல், உடற்பயிற்சி, கல்வி கற்க வாய்ப்பு, சமூகமயமாக்கல், பிரச்சனைகளைக் கையாளும் திறன், சமூக உறவாடல் திறன் வளர்த்தல், அற மற்றும் ஆன்மீக வழிகளில் நெறிப்படுத்தல் போன்றவை அந்தப் பொறுப்புகளில் அடங்கும்.
English
The moral, ethical, and often legal obligations of parents ( and others who have assumed parental roles) regarding the care and development of their children. These responsibilities include the provision of adequate nutrition, shelter, safety, and protection from physical and emotional harm; exercise; opportunities for education and social development; experience in problem solving; development of social skills; moral and spiritual guidance; and role models for effective social functioning.