Parents Anonymous (PA)
மறைநிலைப் பெற்றோர்கள்
தமிழ் விளக்கம்
பெற்றோர்கள் தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்குமான உறவை மேம்படுத்திக்கொள்ளும் முயற்சியில் பரஸ்பரம் உதவிக்கொள்ள ஆரம்பிக்கப்பட்ட தொண்டு நிறுவனம். இது ஆல்ஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு போன்று உறுப்பினர்களைப் பொதுவெளியில் அடையாளப்படுத்தாவிட்டாலும், அந்த அமைப்பு போன்று முற்றிலும் சுயமாக இயங்குவதல்ல. இந்த அமைப்பு உறுப்பினர்களிடமிருந்து சேவைக்கட்டணம் எதையும் பெறாமல், அரசு மற்றும் வெளியாரின் உதவிகளை ஏற்றுக்கொண்டு செயல்படுகிறது. ஆல்ஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பின் பன்னிரண்டு படிகள் (Twelve Step program) என்ற வழிகாட்டி முறையைப்போன்று, வளர்ச்சிக்கான கையேடு ஒன்றை வழிகாட்டியாகவும், சுயஉதவி கருத்தாக்கத்தில் நம்பிக்கையுள்ள, மனித சேவையை பின்னணியாகக் கொண்ட வழிகாட்டியின் தலைமையில் ஒவ்வொரு கிளையும் செயல்படுமாறு அமைத்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு உதவ நண்பர்கள் அமைப்பும் (buddy systems) மற்றும் கிளை வளர்ச்சிக்கான கையேடு ஒன்றும் அனைத்துக் கிளைகளாலும் பின்பற்றப்படுகிறது.
English
One of many national self-help organizations, with chapters in larger U.S communities, whose members help one another restrain themselves from abusing their children. PA maintains a hot line and "buddy systems" and holds regular meetings, patterned partly on the Alcoholics Anonymous (AA) program.