parole
நன்னடத்தை விடுதலை, நன்னடத்தை காரணமாக ஆரம்பக் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் விடுதலை, முதல்முறைக் குற்றவாளிகளுக்கு நன்னடத்தைச் சோதனை முறையான விடுதலை, நன்னடத்தைப் பிணை
தமிழ் விளக்கம்
போர்க்கைதிகளை விடுவிக்கும்போது தப்பித்து ஓடவில்லையென்றோ, விடுவிக்கப்பட்டால் திரும்பவும் சிறைக்குத் திரும்புவதாகவோ அல்லது குறிப்பிட்ட காலம் வரை சிறையிட்டவர்களுக்கு எதிராக எவ்வகை ஆயுதமும் ஏந்துவதில்லை என்ற உத்தரவாதம் தந்து விடுதலை பெறுதல். திரும்பிவரும் உத்திரவாதத்தின் மேல் விடுதலை செய்தல். வெளிச்சென்று திரும்பிவர அனுமதி பெற்ற கைதி. நன்னடத்தையின் காரணமாகத் தண்டனைக்காலம் முடியும் முன்னரே விடுதலை பெறுவது - தண்டனை பெற்று சிறையிலிருக்கும் கைதியை அவரின் நன்னடத்தை காரணமாக, தண்டனைக்காலம் முடியும் முன்னே விடுதலை செய்து, அவரை நன்னடத்தை அதிகாரிகளின் மூலமாகக் கண்காணிப்பது.
English
The release of a prisoner before completion of full sentence because of good conduct in prison, promised good conduct, and continued supervision by an officer of the legal system (often a social worker) once out of prison. See probation, incarceration, and community-based corrections.