partial reinforcement

தொடர்ச்சியற்ற / அவ்வப்பொழுது கொடுக்கப்படும் வலுவூட்டல்

தமிழ் விளக்கம்

எதிர்பார்த்த அல்லது விரும்பத்தக்க நடத்தையை நிலைப்படுத்தவோ, விரும்பத்தகாத நடத்தைகளிலிருந்து விடுவிக்கவோ வெகுமதி அல்லது ஏளனம் போன்ற வலுவூட்டிகள் நடத்தை மாற்று சிகிச்சையில் உபயோகப்படுத்தப்படுகின்றன. இதை ஒரு குறிப்பிட்ட சூழுலின் காரணத்தால் ஒரு நபர் அல்லது உயிரினம் காட்டும் நடத்தை அல்லது கற்றல் முறை என்றும், செயல் விளைவுகளால் (வெகுமதி அல்லது ஏளனம்) தூண்டப்படும் / கட்டுப்படுத்தப்படும் நடத்தை (operant conditioning) என்றும் கூறுவர். இதில் நேர்மறையான அல்லது எதிர்மறையான நடத்தை வலுவூட்டிகளைத் (positive / negative reinforcement) தொடர்ந்து கொடுக்காமல், அவ்வப்பொழுது கொடுப்பது.

English

In social learning theory, the pattern of providing a reward, not every time a desired response is emitted, but with sufficient frequency to encourage the behavior. This increases the likelihood of such behaviors continuing without extinction, even when no immediate rewards are forthcoming.