participative management

பங்கேற்பு நிர்வாகம்

தமிழ் விளக்கம்

ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களை, அந்த நிறுவனம் அடைய விரும்பும் இலக்குகளைத் தீர்மானிக்கவும், அதற்கான செயல்திட்டங்களை வகுக்கவும், பிரச்சனைகளைத் தீர்க்கவும், நிறுவனம் மற்றும் பணியாளர்களைப் பாதிக்கும் விசயங்களில் அவர்களின் கருத்துக்களைப் பெற்று அதனடிப்படையில் முடிவெடுக்கவும் மேற்கொள்ளப்படும் நிர்வாக நடைமுறை. இது ஹாதோர்ன் (Elton Mayo's Hawthorne experiments) என்னுமிடத்தில் நடந்த தொழிலக ஆய்வின் விளைவாக உருவாக்கிய மனித உறவு என்ற கருத்தாக்கதின் அடிப்படையில் உருவான கோட்பாடு. பணியாளர்களின் கருத்துக்கள் முறையாகக் கேட்கப்படும் பட்சம், அவர்கள் நிறுவன வளர்ச்சியில் ஆர்வமுடன் பங்கெடுப்பார்கள் என்பது பல ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கபட்ட உண்மை.

English

A decisionmaking strategy used by some social agency administrators to involve all those who are likely to be affected by desired organizational change. This strategy includes building voluntary consensus and commitment among the organization's personnel, clientele, sponsors, and other interested groups to achieve organizational goals.