Participatory Rural Appraisal
பங்கேற்பு ஊரகத் திறனாய்வு
தமிழ் விளக்கம்
1. பாரம்பரிய பல்கலைக் கழக ஆய்வு முறைகளிலிருந்த மேட்டிமைத்தன்மையால் உருவான சார்பு நிலையும் (biases), சுருக்கல் வாதக் கோட்பாடுகளும் (reductionism) ஒரு ஆய்வுக்களத்தின் எதார்த்த நிலையைப் பிரதிபலிக்க இயலாததால், திட்டமிடலும், திட்டநிர்வாகமும் தோல்வியைத் தழுவுகின்றன என்று சில ஆய்வாளர்கள் உணர்ந்ததன் விளைவாக உருவான ஒரு மாற்று ஆய்வு அணுகுமுறையே பங்கேற்பு ஊரகத் திறனாய்வு எனலாம். இந்த முறை, ஆய்வுக்குட்படுத்தப்படும் சாதாரண மக்களின் (கிராமம், நகரம் மற்றும் பிற விளிம்பு நிலை மக்கள்) அறிவாற்றலை ஆய்வில் முறையாகப் பயன்படுத்தி அதன் மூலம் அம்மக்களுக்கு பொருத்தப்பாடுடைய திட்டங்களை வடிவமைக்கவும், அம்மக்களுக்கு இசைவான முறையில் அத்திட்டங்களை நிர்வகிக்கவும் உதவும் முறை. 2. பங்கேற்பு ஊரகத் திறனாய்வு என்பது அடிப்படையில் ஆய்வு மற்றும் திட்டமிடல் அணுகுமுறை. இதில் ஆய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் சமூதாயத்தினர், வெளியிலிருந்து வரும் நிபுணர்களின் உதவியோடோ அல்லது உதவியில்லாமலோ, அவர்களுக்கு அக்கறையுள்ள / கவலையைத் தரக்கூடிய ஒன்றின் மீது கருத்தூன்றி கவனம் செலுத்தி, பிரச்சனையின் பல்வேறு தன்மைகளை முன்னுரிமைப்படுத்தி, அதைத் தீர்ப்பதற்கான பல்வேறு வழிமுறைகளை மதிப்பீடு செய்து, அதனடிப்படையில் திட்டமிட்டு, அக்கறை கொண்டு செயல்படுத்த உதவும் அணுகுமுறையாகும். ஒரு சமுதாயத்தின் பிரச்சனைகள், அங்குள்ள வளங்கள், முன்னுரிமைகள், அதைக் கையாளும் உத்திகள், சமூகத்தின் இயக்காற்றல் (சாதகங்கள் - ஆதரவு / உந்து சக்திகள் - பாதகங்கள் - எதிர்ப்பு / கட்டுப்படுத்தும் சக்திகள்) போன்றவை மக்கள் பங்கேற்புடனும், பெரும்பாலும் மக்களுக்குப் புரியும்படியாக வரைபடங்கள் மூலம் காட்சிப் படிமங்களாக்கும் அணுகுமுறை. இந்த அணுகுமுறையில், ஒன்றைப்பற்றி மதிப்பிடும் போது / முடிவெடுக்கும் போது, ஒரு சமூகத்திலுள்ள பல்வேறு தரப்பினரின் கருத்துக்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டு, அதன் சாதக பாதகங்கள் கணக்கிலெடுக்கப்பட்டு தீர்வுகள் கண்டுபிடிக்கப்படும். இந்தச் செயல்முறையில் வெளி நிபுணர்கள் துணை தந்து ஊக்குவிக்கலாமேயொழிய அவர்கள் எக்காரணம் கொண்டும் இச்செயல் முறையை தங்கள் வசப்படுத்திக்கொண்டு தலைமையேற்கலாகாது. 3.பங்கேற்பு ஊரகத் திறனாய்வு என்பது ஒரு செயலில் / ஆய்வில் மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கும், மக்கள் தங்கள் மனதிலிருப்பதை எளிதில் பகிர்ந்துகொள்ளத் தூண்டும், தங்களுடையதும் மற்றும் சமுதாயத்தினுடையதுமான சிந்தனைகளை / அபிப்பிராயங்களை தொகுக்க உதவும், தாங்களும் பிறரும் எளிமையாகப் புரிந்துகொள்ளவும் அதன்மூலம் புதிய படிப்பினைகளையோ அல்லது உள்ளுணர்வையோ பெற உதவும் பல்வேறு உத்திகளின் தொகுப்பு.
English
By the early 1980s, there was growing dissatisfaction among development experts with both the reductionism of formal surveys, and the biases of typical field visits. The approach aims to incorporate the knowledge and opinions of rural people in the planning and management of development projects and programmes.
Participatory rural appraisal (PRA) is a set of participatory and largely visual techniques for assessing group and community resources, identifying and prioritizing problems and appraising strategies for solving them. It is a research/planning methodology in which a local community (with or without the assistance of outsiders) studies an issue that concerns the population, prioritizes problems, evaluates options for solving the problem(s) and comes up with a Community Action Plan to address the concerns that have been raised.
PRA is particularly concerned that the multiple perspectives that exist in any community are represented in the analysis and that the community itself takes the lead in evaluating its situation and finding solutions. Outsiders may participate as facilitators or in providing technical information but they should not 'take charge' of the process.