passing

கடந்துசெல்லுதல்

தமிழ் விளக்கம்

ஓரினச் சேர்க்கையாளர்களாகிய ஆண்களும் (gay), பெண்களும் (lesbian), பிறர் தங்களை ஏளனமாக, வெறுப்பாக, பாகுபடுத்திப் பார்க்காமலிருக்க தாங்கள் இயல்பான பாலுணர்வு (மாற்று பால் நாட்டம்) நாட்டம் உடையவர்களாக வெளியில் காட்டிக்கொள்வது.
பார்க்க: coming out - வெளியே வருதல், வெளியேறுதல், வெளிப்படுத்துதல் வெளிவருதல் அல்லது வெளிப்படுத்துதல் என்பது பெண் (Lesbian) மற்றும் ஆண் (Gay) ஓரினச் சேர்கையாளர்கள், இருபாலின அப்பியாசிகள் மற்றும் திருநங்கைகள் அதுகாறும் இரகசியமாக வைத்திருந்த தங்களின் பாலின அடையாளத்தை வெளியில் சொல்வது.

English

The process in which gay men and lesbians present themselves to others as being heterosexual. The practice is common among the gay and lesbian population to avoid stigma, hostility, and discrimination. See also "coming out."