passive-aggressive
மறைந்திருக்கும் விரோதம் / ஆக்ரோசம் / வன்மம்
தமிழ் விளக்கம்
தன்னுடைய வன்மத்தை வெளிப்படையாக அல்லாமல் மறைமுகமாக வெளிப்படுத்துபவர். தனக்குப் பிடிக்காதவரிடம் நேரடியாக மோத முடியாத நிலையிலோ அல்லது மோதுவதற்குப் போதுமான சக்தி இல்லையென்ற நிலையிலோ, உதட்டைப் பிதுக்கியோ, காரியத்தைக் காலதாமதப்படுத்தியோ, விடாப்பிடியாகக் காரியங்களுக்கு முட்டுக்கட்டையிட நினைக்கும் போக்கு. அவருடைய கோபம் பிரக்ஞையற்ற நிலையில் இருப்பதால், அதன் வெளிப்பாடுகளும் பிரக்ஞையற்றே இருக்கும். இந்த நடத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்தப்படும் பட்சம் அது ஆளுமைக் கோளாறையும், மனப்பிறழ்வையும் உண்டாக்கும்.
English
The behavior of an individual who uses covert actions to fight another person or organization. The individual may feel angry but powerless in direct confrontations, so he or she becomes obstructionistic, obstinate, and inefficient and tends to pout and procrastinate. Because the anger is often unconscious, the reaction is also usually unconscious. When this behavior is deeply ingrained and persists through many situations and life phases, it may indicate the presence of a personality disorder.