passive-aggressive personality disorder

வன்மத்தை மறைத்து வைத்திருக்கும் ஆளுமைக் கோளாறு

தமிழ் விளக்கம்

எதிர்மறைச் சிந்தனை கொண்ட, வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவிக்காமல், உள்ளடியாக சலித்துக்கொள்கிற, பிறர் எதிர்பார்ப்புகளை உதாசீனப்படுத்தித் தட்டிக்கழிக்கின்ற ஆளுமைக் கோளாறு. இவர்கள் தங்களின் தொழில் மற்றும் சமூகப் பொறுப்புகளை மறைமுகமாகத் தவிர்ப்பார்கள். இந்த குணம் தொடரும்போது எந்தப் பொறுப்பையும் செய்வதற்கற்ற திறனிழந்து, மற்றவர்களுடன் உறவாடும் திறனிழந்து, அவநம்பிக்கை கொண்டவர்களாகி, அதனாலே மனத்தளர்ச்சிக்குள்ளாகி, மது மற்றும் போதையை நாட ஆரம்பிப்பர். இவர்கள் மற்றவர்களின் வேண்டுகோளுக்கு இணங்குவதாக வெளிப்படையாகக் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் சபித்துக்கொண்டே அந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவார்கள். பணியிடத்திலும், பிற இடங்களிலும், தான் சார்ந்திருப்பவர்கள் மீதும் அடைந்த ஏமாற்றங்களாலே இவர்கள் மாறாச் சலிப்புள்ளவர்களாவிடுவார்கள்.

English

Also called negativistic personality disorder, a pervasive pattern of negative attitudes and passive resistance; the individual habitually resents, opposes, and covertly obstructs demands to fulfill obligations and appropriate expectations. This is a proposed diagnosis by the DSM-IV.