passive resistance

சாத்வீக எதிர்ப்பு

தமிழ் விளக்கம்

தங்களுக்கு விரோதமாக அல்லது தங்களிடம் நியாயமற்று நடக்கும் நிறுவனங்களை பயன்படுத்துவதைத் தவிர்த்தும், அதனோடு ஒத்துழைக்க மறுத்தும் செய்யப்படும் வன்முறை தவிர்த்த சாத்வீகமாக எதிர்ப்பு தெரிவித்தல். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு மகாத்மா காந்தி அகிம்சை முறையில் போராடினார். ஒத்துழையாமை இயக்கம், வரிகொடா இயக்கம், உப்புச் சத்தியாகிரகம், அன்னியப் பொருட்களை பகிஷ்கரித்தல் போன்ற வன்முறை தவிர்த்த முறைகள் பெருவாரியான மக்களை சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்க வைத்து போராட்டத்திற்கு வலுசேர்த்தது. காந்தியடிகளின் அஹிம்ஸைக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அமெரிக்கக் கருப்பினத்தவர், 1950 ஆம் ஆண்டு முன்னெடுத்த, பொதுப் போக்குவரத்தை பகிஷ்கரிக்கும் போராட்டம் பிரசித்தி பெற்றது. அமெரிக்கப் பேருந்துகளில், கருப்பினத்தவர்கள் கடைசி இருக்கைகளில் அமரவேண்டும், வெள்ளையர்கள் வரும் பட்சம் அவர்களுக்கு எழுந்து இடம் தரவேண்டும் என்ற நடைமுறையை, வன்முறையில் ஈடுபட்டு எதிர்ப்புத் தெரிவிக்காமல், பேருந்துகளில் பயணம் செய்வதைத் தவிர்த்ததன் மூலமாகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அந்த நடைமுறையை மாற்றிக்கொள்ளும் அளவு சாத்வீகமான முறையில் அழுத்தம் கொடுத்து சாதித்தார்கள்.

English

A nonviolent form of social activism in which individuals or groups stop using or cooperating with the institutions to which they object. For example, in the late 1950s, when African American people in the South objected to the rule requiring them to sit in the back of buses, they banded together to boycott the buses. Without direct confrontation, the movement passively but effectively resisted the objectionable policy.