pastoral counselor

கிறிஸ்தவ மத போதக ஆலோசகர்கள்

தமிழ் விளக்கம்

தேவாலயத்தைச் சேர்ந்த குருமார்கள், தங்கள் தேவாலயத்திற்கு வரும் பக்தர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ, தேவாலயத்தின் சார்பாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ செய்யும் உளவளச் சேவை. இவர்கள் உளவியல் ஆலோசனை சொல்ல, தாங்கள் பயின்ற இறையியல் கல்லூரிகளிலோ அல்லது சமூகப்பணி கல்லூரிகளிலோ முறையாகக் கல்வியும் பயிற்சியும் பெற்றிருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் தாம்பத்திய ஆலோசனை (marital therapy), திருமணத்திற்கு முன்னான வழிகாட்டல் (premarital guidance), மற்றும் ஆன்மீக ஆலோசனை (spiritual counseling) தரும் சேவைகளைச் செய்வர்.

English

Clergy or former clergy who provide counseling and psychotherapy to clients, either within the auspices of their churches or in autonomous practices. Many of these professionals obtain their training as counselors within theological schools, whereas others obtain additional education in schools of social work and other fields. They tend to specialize in marital therapy, premarital guidance, and spiritual counseling.