paternalism

அரவணைப்புவாதம்

தமிழ் விளக்கம்

தனக்குக் கீழுள்ளவர்களை அவர்களின் நன்மை கருதி ஒரு தந்தையைப்போல வழிகாட்டுவது அல்லது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் மனோபாவம். தங்களிடம் வரும் பொறுப்பற்ற வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளைக் கூட ஆர்வமுடன் தீர்க்க முற்படும், கீழோரிடத்துக் கருணை கட்டுகிற, தாராள நோக்குள்ள, வாடிக்கையாளர்களே எதிர்பார்க்காதளவு கருணைகாட்டுகின்ற சமூகப்பணியாளர்களையும், சமூக நல நிறுவனங்களையும் கேலியாகக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்படுவதுண்டு

English

A principle of authority in which one person or institution manages the affairs of another. The term is often used disparagingly against social workers and social welfare organizations that try to help people solve their problems without the direct involvement of those being helped.