pathological gambling
சீட்டாட்ட மோகம், சீட்டாட்ட நோய், சூதாடுதல், பணயம் வைத்தலும் கவறாடுதலும், பந்தயம் வைத்தலும் சூதாடுதலும், சொக்கட்டான் விளையாட்டு
தமிழ் விளக்கம்
சில செயல்களால், குறிப்பாக மனமகிழ் விளையாட்டுகளில் ஒன்றான சீட்டாட்டத்தின் மூலம் அன்றாட வாழ்க்கைக் கடமைகளைச் செய்யத்தவறி, அதனால் பொருளாதாரப் பிரச்சனைகள் ஏற்பட்டு கடன்பட்டாலும், அக்கடனை அடைக்க ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு, குடும்ப சமூக உறவுகள் சீர்குலைந்தாலும், கட்டுப்படுத்தமுடியாத உளத்தூண்டல்களால் அந்தச் செயலிலிருந்து விடுபடமுடியாப் பழக்க நோய். இந்த மனோபாவமுள்ளவர்கள் பணமே எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணமென்றும், பணத்தால் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கமுடியுமென்றும் நம்பி சீட்டாட்டத்தில் தாங்கள் இழந்த பணத்தை மீண்டும் பெற ரகசியமாக சீட்டாடிக் கொண்டிருப்பார்கள்.
English
An impulse control disorder in which the individual continues to make wagers on games of chance despite continuous disruption in life responsibilities, such as financial problems, disrupted family relationships, and nonviolent criminal behavior, to pay for debts. Typically, these individuals believe that money can cause and solve their problems and continue gambling, often secretively, to recoup their losses. See also Gamblers Anonymous.