pathology

நோயியல்

தமிழ் விளக்கம்

மருத்துவத்தில் நோயியல் என்பது நோய் பற்றி ஆராய்ந்து என்ன நோய், அதற்கான காரணமென்ன, அதன் அறிகுறிகள் மற்றும் அதன் விளைவுகளைக் கண்டு பிடித்தலாகும். இது உடலும், மனமும், நடத்தையும் இயல்பிலிருந்து விலகி எம்மாதிரியான செயல்பிறழ்ச்சிகளை உருவாக்குகின்றது என்பதை அறிவதையும் குறிக்கும். மருத்துவ நோயியல் இரு பெரும் பிரிவுகளில் அடங்கும். அவை உடற்கூறியல் நோயியல் (anatomical pathology), சோதனை நோயியல் (clinical pathology) என்பனவாகும். மருத்துவ நோயியலில் உடல் உறுப்புக்கள், இழையங்கள், உடல் திரவங்கள், அத்துடன் சில சமயம் முழு உடல் என்பன நோயறிதலின் பொருட்டு ஆய்வுக்குட்படும். பிணக்கூறாய்வில் (autopsy) முழு உடலும் ஆய்வுக்குட்படும். பொதுவான நோயியல் என்பது, உடலிலுள்ள உயிரணுக்கள், திசுக்கள் (இழையங்கள்) ஆகியவற்றில் ஏற்படும் காயங்களின் தன்மைகளையும், அந்தக் காயங்களைத் திருத்தி பழைய நிலைக்குக் கொண்டு வரவும், அதற்கு உடலானது எவ்வாறு எதிர் வினையாற்றும் என்பதைப் பற்றியும் விளங்கிக்கொள்ள முயல்வதைக் குறிக்கும். நோயை எதிர்கொள்ள உயிரணுக்கள் இழையநசிவு (Necrosis), அழற்சி (inflamation), காயம் ஆறுதல் (wound healing), உயிரணுப் பெருக்கம் (Neoplasm) போன்ற முறைகளால் முயற்சியை மேற்கொள்ளும்.

English

The study of the nature of physical or mental diseases, including causes, symptoms, effects on the subject, and the circumstances in which the disease occurs. The term is also used more broadly in referring to physical or behavioral deviations from the norm that can or do result in disease or dysfunction. See also psychopathology.