Patient Self-Determination Act

நோயாளிகள் சுய நிர்ணயச் சட்டம்

தமிழ் விளக்கம்

உள்ளுறை மருத்துவக் கவனிப்பு வழங்கும், அமெரிக்க அரசின் நிதி உதவி பெரும் மருத்துவமனைகள், தங்களிடம் சிகிச்சை பெரும் நோயாளிகளுக்கு முன்கூட்டியே சொல்லப்பட்ட உத்தரவு, வழிகாட்டுதல்கள் (advance directive) (நோய்வாய்ப்பட்ட ஒருவர், இனிவரும் காலங்களில் தன் உடலாரோக்கியம் எப்படியிருக்கும், என்னமாதிரியான சிகிச்சைகள் தேவைப்படுமென்று கணிக்க இயலாத சூழலில், தன் வாழ்நாளை நீட்டிக்க எந்தெந்த மாதிரியான சிகிச்சை தனக்கு அளிக்கப்படலாம், அளிக்கப்படக்கூடாது என்பதை குறிக்கும் சட்டப்படி செல்லத்தக்க விருப்பாவனம்) வசதி அந்த மருத்துவமனையில் அமுலில் உள்ளது என்பதைத் தெரிவிக்க 1990 ஆம் ஆண்டு போடப்பட்ட சட்டம்.

English

The 1990 U.S. federal legislation (P.L. 101-508) that requires inpatient health care facilities receiving federal funds to inform patients of their rights to advance directives and to indicate in the patients' charts that such a directive has been established. See also living will.