patients

நோயாளிகள்

தமிழ் விளக்கம்

நோயாளி என்றால் இலத்தீன் மொழியில் துன்பப்படுகிறவர் என்று பொருள். மருத்துவத்தில், நோய்க் கிருமிகளாலோ, நோய்க்கிருமிகள் தாக்கும் அளவிற்கு உடல் பலகீனமடைந்ததாலோ, விபத்தாலோ, வேறு வகையாலோ, உடலியக்கச் செயல்பாடுகளின் இயல்புத் தன்மை பாதிக்கப்பட்டு பல நிலைகளைக் (மருத்துவர், உடலியக்க மருத்துவர், உளப்பிணி மருத்துவர், மருத்துவ உதவியாளர், பதிவு பெற்ற செவிலியர்) கொண்ட மருத்துவக் கவனிப்பு தருபவர்களால் ஒருமுறையோ அல்லது தொடர்ந்தோ சேவையளிக்கப்டுபவர். பெரும்பாலும் சமூகப்பணியாளர்கள் நோயாளி என்ற வார்த்தைக்குப் பதிலாக வாடிக்கையாளர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலும், மருத்துவ மனைகளில் பணிபுரியும் மருத்துவ சமூகப்பணியாளர்கள் நோயாளி என்ற வார்த்தையையே பயன்படுத்துகின்றனர்.

English

Those who are receiving care and treatment from physicians and health care personnel. Social workers generally use the term "client" when referring to the individuals they are serving. However, the term "patient" is more commonly used by social workers who are employed in health care settings (for example, hospital and medical social workers).