patients rights
நோயாளிகளின் உரிமைகள்
தமிழ் விளக்கம்
நோயாளிகளின் உரிமை என்பது தேவையற்ற சிகிச்சை முறைகளிலிருந்து நோயாளிகளைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட சட்ட ரீதியான, தார்மீக ரீதியான, நியாய பூர்வமான தரக்கட்டுப்பாடுகள் எனலாம். சிகிச்சை பெறவும், தங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை அறிந்துகொண்டு அதில் பங்கேற்பதும் நோயாளிகளின் உரிமைகளில் அடங்கும். நோயாளிகளுக்குக் கீழேகண்ட உரிமைகளைப் பல நாடுகள் அங்கீகரித்துள்ளன. 1. நோயாளி தன் ஆரோக்கியத்தைப் பற்றிய தகவல்களைச் சிகிச்சையளிக்கும் மருத்துவர் தெளிவாகவும், புரியும்படியும் எடுத்துச் சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கும் உரிமை. 2. தனக்கு எந்த மாதிரியான சிகிச்சை வழங்கப்படவிருக்கின்றது, அதனுடைய விளைவுகள் என்ன மாதிரியாய் இருக்குமென்று தெரிந்து கொள்ளும் உரிமை. 3. அதனடிப்படையில் தனக்கு பாதுகாப்பானதும் பொருத்தமானதானதுமான பராமரிப்பினைப் பெறும் உரிமை. 4. தேவைப்படின் இரண்டாவது அபிப்பிராயம் பெற்றுக்கொள்ளும் உரிமை. 5. தனக்கு வழங்கப்படும் சிகிச்சையில் பங்கெடுக்கும் உரிமை 6. தங்களுடைய தகவல்கள் அந்தரங்கமாக பேணப்படவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமை 7. தங்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பற்றிய ஆவனங்களைப் பெறுவதற்குரிய உரிமை. 8. தங்களுக்கு விருப்பமற்ற சோதனை, செய்முறைகள் மற்றும் சிகிச்சையை மறுக்கும் உரிமை. 9. மருத்துவமனையிலிருந்து தங்கள் விருப்பத்திற்கேற்ப வெளியேறிக்கொள்ளும் உரிமை.
English
The legal, moral, and ethical standards that protect patients and clients from unwarranted treatment. Patients' rights also include access to care and opportunities to participate in decisions affecting their care and treatment. The American Civil Liberties Union (ACLU) has delineated eight legal rights of patients: the right to (1) informed participation in all decisions involving one's health care; (2) privacy respecting the source of payment for treatment and care; (3) prompt attention, especially in emergency situations; (4) clear, concise explanation of all proposed procedures in understandable terms, including the risk of death or serious side effects, and the right not to be subjected to any procedure without voluntary, competent, and understanding consent; (5) clear, complete, and accurate evaluation of one's condition and prognosis before being asked to agree to any test or procedure; (6) access to all information contained in one's medical record while in the health care facility and the ability to examine the record on request; (7) refuse any drug, test, procedure, or treatment; and (8) leave the health care facility at will regardless of physical condition or financial status, although the patient may be requested to sign a release stating that he or she is leaving against the medical judgment of the doctor.