PC

அரசியல் ரீதியாகச் சரியானது, தொழில் குழுமம், சொந்தக் கணனி

தமிழ் விளக்கம்

political correctness (PC) - நாகரீக அரசியல், பண்பட்ட அரசியல். அரசியலிலோ அல்லது பொது வாழ்க்கையிலிருப்பவர்களோ பிறரின் மத, இன, கலாச்சார, இயலாமை அடிப்படையில் மனம் புண்படாத அளவிற்கு நாகரீகமாகவும், நாசூக்காகவும் பேசுவது. மனதிலிருப்பதை நேரடியாகச் சொல்லாமல் சுற்றி வளைத்து பேசும் இப்பேச்சு கேலிக்குரியது என்று விமர்சிக்கப்படுகிறது.
professional corporation (PC) - திறத்தொழிலினர் குழுமம். ஒரு திறத்தொழிலை குழுமமாகச் செய்ய சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்ட நிறுவனம். தனியாகவோ அல்லது குழுவாகவோ இம்மாதிரியான நிறுவனங்களைப் பதிவு செய்யலாம். தனியாகத் தொழில் செய்யும் போது கிடைக்காத வரிச்சலுகைகள் நிறுவனமாகப் பதிவுசெய்து செயல்படும்போது கிடைப்பது மட்டுமல்ல, மற்ற பங்குதாரர்கள் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்கத் தேவையுமில்லை. அவ்வாறு பதிவு செய்யப்பட்டபின் அதை மற்ற நிறுவனங்களிலிருந்து வேறுபடுத்திக்காட்ட நிறுவனத்தின் பெயருக்குப் பின்னால் PC (Professional Corporations) அல்லது PA (Professional Association) என்ற எழுத்துக்கள் பின்னிணைக்கப்படும்.
personal computer - தனிநபர் கணினி

English

1. See political correctness (PC). 2. See professional corporation (PC). 3. PC also commonly refers to a type of personal computer.