PCP
பென்சிசைக்கிளிடின் ஹைட்ரோகுளோரைடு
தமிழ் விளக்கம்
விலங்குகளை மயக்கத்திற்கு உள்ளாக்க அனுமதிக்கப்பட்ட, ஆனால் மனிதர்கள் உபயோகிக்கத் தடை செய்யப்பட்ட மருந்து. இதைக் குறைந்த அளவு உபயோகப்படுத்தும்போது பரவசநிலை மற்றும் உணர்வின்மையை உருவாக்கும். ஆனால் அளவு மிகுதியானால் சித்தப் பிரமை, வலிப்பு, முரட்டுத்தனமிக்க நடத்தை, உடலைப் பற்றிய விசித்திரமான எண்ணங்கள் தோன்றும். இதைத் தொடர்ந்து உபயோகிக்கும் பட்சத்தில் மனச் சிதைவு, உணர்விழப்பு, மாரடைப்பு போன்றவையும் ஏற்படும். இந்த மருந்து 'தேவதைகளின் தூசு' (angel dust), வனப்பி (lovely), அன்புப் படகு, அன்பு ரதம் (loveboat) போன்ற வட்டாரக் குறிச்சொற்களாலும் அழைக்கப்படுகிறது.
English
Phencyclidine hydrochloride, an illegal drug (except as an animal tranquilizer) that in low doses produces euphoria and numbness but in higher doses may produce delirium, convulsions, violent behavior, and changes in the users' perceptions of their bodies. Also known as "angel dust," "lovely," and "loveboat," the drug can have severe and permanent effects such as psychosis, coma, or heart failure.