PCP abuse

பென்சிசைக்கிளிடின் ஹைட்ரோகுளோரைடு துஷ்பிரயோகம்

தமிழ் விளக்கம்

மனித உபயோகத்திற்குத் தடை செய்யப்பட்ட போதை மருந்தான பென்சிசைக்கிளிடின் ஹைட்ரோகுளோரைடையோ அல்லது அதே போன்று செயல்படும் அரிசைக்ளோஹெக்ஸிலாமைன் (arylcyclohexylamines) போன்றவற்றைப் பாவிக்கும் போது உற்சாக உணர்வு, உணர்ச்சி நிலையின்மை, பகட்டாரவார உணர்வு, உளஇயக்கக் கிளர்ச்சி, வலி உணராமை போன்ற அறிகுறிகள் ஏற்படும். தொடர்ந்து உபயோகப்படுத்தும் போது நிலைபெற்ற மனமயக்கத்தினால் உபயோகிப்பாளரின் சமூக உறவுகள் சீரழியும்.

English

A substance-use disorder involving PCP (phencyclidine hydrochloride) or similarly acting arylcyclohexylamines, which leads to sensations of grandiosity, emotional lability, euphoria, psychomotor agitation, and diminished responsiveness to pain. When PCP is used repeatedly, the individual develops impaired social functioning.