peace dividend

அமைதியினால் கிடைத்த பங்காதாயம் / இலாபம்

தமிழ் விளக்கம்

அமைதியினால் கிடைக்கும் ஆதாயமென்பது பனிப்போர் (cold war between America & Russia) முடிந்த பின்பு, இராணுவத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதிச் சுமை குறைய, மிச்சமான நிதியை வளர்ச்சிப் பணிகளுக்குச் செலவிட முடிந்ததை அமைதியினால் விளைந்த ஆதாயம் என்பர். ஒரு நாடு உள்நாட்டுக் கலவரங்களிலின்றி, அந்நிய நாட்டு அச்சுறுத்தலின்றி, அமைதியாக இருக்கும் போது அந்த நாடு பாதுகாப்பிற்காக அதிகம் செலவிடத் தேவையில்லையாதலால், அந்த நாட்டால் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தி முதலீடு செய்யமுடியும். மேலும் அமைதியான சூழ்நிலை முதலீட்டாளர்களைப் பொருளாதார செயல்களில் முதலீடு செய்யத் தூண்டும். போரற்ற அமைதியான சூழ்நிலை பல்வேறு நன்மைகளை ஒரு நாட்டிற்கு கொடுப்பதைத்தான் அமைதியின் ஆதாயம் என்கின்றனர்.

English

Funds that are no longer needed to maintain the Cold War military budget that could be allocated for nondefense public purposes such as education, infrastructure, and social welfare. At the end of the Cold War in 1990, many political leaders and voters assumed that more of these funds would be available than has proved to be the case.