peace movement

சமாதான இயக்கங்கள்

தமிழ் விளக்கம்

மனிதர்களுக்கிடையேயும், தேசங்களுக்கிடையேயும் ஏற்படும் முரண்பாடுகளை வன்முறை, போர், பயங்கரவாதம், தீவிரவாதத்தை உபயோகிக்காமல் தீர்க்க எடுக்கப்பட்ட தனிமனித, நிறுவன, மற்றும் அரசாங்கங்களின் முயற்சிகளை சமாதான இயக்கங்கள் எனலாம். இந்த முயற்சிகளில் சமூகப்பணியாளர்கள் முன்னோடியாகச் செயல்பட்டிருக்கின்றார்கள். எடுத்துக்காட்டாக ஜேன் ஆடம்ஸ் மற்றும் ஜேனாட்டி ரான்கின் போன்ற சமூகப்பணியாளர்களின் முயற்சி முக்கியமானது. ஜேன் ஆடம்ஸ் அவர்கள் தோற்றுவித்த அமைதிச் சங்கம் (Peace Association), அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான சர்வதேச மகளிர் அமைப்பு (Women's International League for Peace and Freedom), அமைதிக்கான மகளிர் முயற்சி (Women Strike for Peace), தேசிய அமைதி அறக்கட்டளை (National Peace Foundation), போர் எதிர்ப்பாளர் கழகம் (War Resisters League), அமைதிக்கான செயல்பாடு (Peace Action) போன்ற அமைப்புகள் சமாதானத்திற்கான முயற்சிகளை ஒருங்கிணைத்தன. எல்லா மதங்களும் சமாதானத்திற்கான அமைப்புகளை ஏற்படுத்தின. சமாதானத்திற்கான குருமார்கள் மற்றும் பொதுமக்களின் அக்கறை (Clergy and Laity Concerned) மூத்த கிருஸ்துவர்களின் அமைதிக்கான ஐக்கியம் (Presbyterian Peace Fellowship), நண்பர்கள் அமைதிக்குழு (Friends Peace Committee), அமைதிக்கான யூதர்களின் ஐக்கியம் (Jewish Peace Fellowship), அமைதிக்கான கத்தோலிக்கர் ஐக்கியம் (Catholic Peace Fellowship), ஆயுதப் பரவலைத் தடுக்கும் மத நல்லிணக்க மையம் (Interfaith Center to Reverse the Arms Race), பேக்ஸ் கிறிஸ்டி என்ற கத்தோலிக்க சமாதான மையம் (PAX Christi) போன்றவை முக்கியமான அமைப்புக்களாகும். இது தவிர பல தொழில் துறை சார் அமைப்புகளும் சமாதானப் பணியை முன்னெடுத்துச் செய்கின்றன. சமூகப் பொறுப்புக்களுக்கான மருத்துவர் குழு (Physicians for Social Responsibility), சமூகப்பொறுப்புக்களுக்கான உளவியலாளர் குழு (Psychologists for Social Responsibility), அணு ஆயுதத்திற்கெதிரான சமூகவிலாளர் அமைப்பு (Social Scientists Against Nuclear War), உலக சமாதானத்திற்கான கல்வியாளர்களின் சர்வதேச அமைப்பு (International Association of Educators for World Peace), உலகப் பாதுகாப்பிற்கான வழக்கறிஞர் கூட்டமைப்பு (Lawyers Alliance for World Security) போன்ற அமைப்புகள் இதில் முக்கியமானவை).

English

The organized efforts of individuals, organizations, social institutions, and governments to achieve conflict resolution without wars, terrorism, or social injustice. Social workers, including Jane Addams and Jeannette Rankin, have been at the forefront of such movements. Many organizations coordinate peace efforts, including the Jane Addams Peace Association, Women's International League for Peace and Freedom, Women Strike for Peace, National Peace Foundation, War Resisters League, and Peace Action. Most religious groups also sponsor peace organizations, including Clergy and Laity Concerned, Presbyterian Peace Fellowship, Friends Peace Committee, Jewish Peace Fellowship, PAX Christi, the Catholic Peace Fellowship, and the Interfaith Center to Reverse the Arms Race. Many professional groups also maintain peace committees, including Physicians for Social Responsibility, Psychologists for Social Responsibility, Social Scientists Against Nuclear War, International Association of Educators for World Peace, and Lawyers Alliance for World Security.