pediatric AIDS
மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாடுள்ள குழந்தைகள்
தமிழ் விளக்கம்
மனிதனின் நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும் திறன் கொண்ட வைரஸ் தொற்றிய கரு, சிசுக்கள் மற்றும் குழந்தைகளைப் பராமரிக்கச் செய்யப்படும் முயற்சி. ஏய்ட்ஸ் தொற்றிய இரத்தக் குருதியேற்றத்தின் மூலம் பாதிக்கப்பட்ட எலிசபெத் கிலேசர் (Paul Michael Glaser என்ற இயக்குனரின் மனைவி) என்ற பெண்ணுக்குப் பிறந்த குழந்தைகளுக்கும் அந்த நோய் தொற்றியதால் அதிர்ச்சியடைந்த அவர், எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளைக் காப்ப்ற்றவும், பராமரிக்கவும் உலகளாவிய அமைப்பை ஏற்படுத்தினார். 17 நாடுகளில் 4800 களப்பணி மையங்கள் மூலம் இலட்சக்கணக்கான தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் இந்த அமைப்பு சேவை செய்து வருகிறது.
English
HIV disease that infects fetuses and infants to preadolesecents. The federal Maternal and Child Health Services program, under the U.S. Department of Health and Human Services (DHHS) and the U.S. Public Health Service, manages a major pediatric HIV/AIDS program to help with community-based care, education, and technical assistance.