peer review
சரியினையானவர்களின் திறனாய்வு / மதிப்பீடு, சரியினையானவர்களின் மதிப்பீடு
தமிழ் விளக்கம்
செய்யவிருப்பதாக முன்மொழியப்பட்ட ஒரு செயலைப் பற்றியோ அல்லது செய்து முடிக்கப்பட்ட செயல் பற்றியோ, அந்தச் செயல்சார்ந்த துறையில் உள்ள சரியினையான அனுபவமும் திறனும் கொண்டவர்களால், அந்தச் செயல் குறிப்பிட்ட தரத்தோடும், நேர்த்தியோடும் செய்யப்பட்டிருக்கின்றதா என்பதை மதிப்பீடு செய்தல். இவ்வகையான மதிப்பீடு தொழில் தரத்தைப் பேணவும், செயல்திறனை மேம்படுத்தவும், நம்பகத்தன்மையை ஏற்படுத்தவும் கையாளப்படுகிறது. அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடும் இதழாளர்கள், ஒரு கட்டுரை அந்த இதழில் வெளியிடும் தரத்துடனிருக்கின்றதா என்பத மதிப்பீடு செய்ய இம்முறையைப் பயன்படுத்துகின்றனர். சமூகப்பணியில் ஒரு சமூகப்பணியாளர், எதிர்பார்க்கப்பட்ட தரத்தோடும், தொழில் நெறியோடும் செயல்பட்டிருக்கின்றாரா என்றறிவதற்கு இந்த மதிப்பீடு முறை பயன்படுகிறது.
English
A formal evaluation by a relevant peer group of an individual's general competence or specific actions. In social work and other professions, the term refers to a formal periodic process in which professional standards of intervention have been spelled out and practices are monitored by colleagues. For example, if a client or someone making a third-party payment (such as an insurance company) suspected some wrongdoing by a social worker and complained to the person's professional association or state licensing authority, a panel of fellow social workers could review the case to determine appropriate action. See also professional review organizations (PROs) and accountability.