pelvic inflammatory disease (PID)
இடுப்பு அழற்சி நோய்
தமிழ் விளக்கம்
இடுப்புப் பகுதியில், பெண்ணின் இனப்பெருக்க மண்டலத்தின் மேற்பகுதியில் குறிப்பாக கருப்பை, கருக் குழாய்கள் மற்றும் முட்டைப்பையில் ஏற்படும் அழற்சி. இது மேகவெட்டை மற்றும் கிளமீடியா என்ற பாக்டீரியாத் தொற்றுக்களால் ஏற்படும் பால்வினை நோய்களால் ஏற்படுவது. நோயின் ஆரம்பகட்டத்தில் வெளிப்படையான அறிகுறிகள் ஏதும் தென்படாவிட்டாலும், நோய் தொடரும் பட்சம் துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதல், காய்ச்சல், சிறுநீர் கழிக்கும் போதும், உடலுறவின் போதும் வலியேற்படுதல், ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற அறிகுறிகள் ஏற்படும் சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் கருக்குழாயில் வடு ஏற்பட்டு கருவுறாமை, இடுப்புப் பகுதியில் புற்றுநோய், நிலைபெற்ற இடுப்புவலி ஏற்படும்.
English
Infection of the female pelvic organs, commonly caused by sexually transmitted diseases (STDs) such as gonorrhea and chlamydia. PID often causes scarring of the fallopian tubes and infertility in 20 percent of the infected women.