penal institution
தண்டனைக்குரிய இடங்கள், சிறைச்சாலை
தமிழ் விளக்கம்
குற்றவாளிகளென்று நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களை, தண்டனைக்குரிய காலம் முழுவதும் அடைத்து வைத்திருக்கும் இடங்கள் சிறைச்சாலைகள் எனப்படுகின்றன. இது தண்டனையை நிறைவேற்றுமிடங்களாக மட்டுமல்ல, திருத்தியல் சிறையாகவும், குற்றத்திற்குக் கழுவாய் தேடுமிடங்களாகவும், சீர்திருத்தப் பணிமனைகளாகவும் செயல்படுகிறது. இங்கு பின்பற்றப்படும், கற்றுக் கொடுக்கப்படும் கல்வி, பின்பற்றப்படும் நடைமுறைகள் மற்றும் செய்துதரப்படும் வசதிகள், குற்றவாளிகள் மீண்டும் குற்றஞ்செய்யத் தலைப்படும் மனப்பான்மையை மாற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
English
Penitentiary; a facility for the incarceration of convicted criminals that sometimes provides them with education and other resources that might reduce the recidivism rate. See also carceral organizations.