Pennsylvania School

பென்சில்வேனியா (அணுகுமுறை) பள்ளி

தமிழ் விளக்கம்

பென்சில்வேனியா பல்கலைக் கழக சமூகப்பணித்துறையில் பேராசிரியர்களாகப் பணியாற்றிய விர்ஜீனியா ராபின்சன் மற்றும் ஜெஸ்ஸி டாஃப்ட் (Virginia Robinson & Jessie Taft) ஆகியோர் அங்கே பணிபுரிந்த உளப்பகுப்பாய்வு பேராசிரியர் ஒட்டோ ரேங்க் (Otto Rank ) உடன் இணைந்து உருவாக்கிய செயல் சார்ந்த சமூகப் பணி அணுகுமுறை (functional school in social work or the Rankian School).
மானுட ஆளுமையின் வளர்ச்சியை, தன்மையைப் புரிந்துகொள்ள பல்வேறு கருத்தாக்கங்கள் சமூகப் பணியாளர்களுக்கு உதவுகின்றன. சிக்மண்ட் பிராய்டால் பிரேரிக்கப்பட்ட Diagnostic school (நுண்ணாய்வு அல்லது நோயியல்பு அறிதல்), ஓட்டோ ரேங்க் போன்றவர்கள் பரிந்துரைத்த functional school (மனித செயல்சார்ந்த) கருத்தாக்கங்கள், சமூகப் பணியாளர்களுக்குப் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளவும் அதைத் தீர்க்கவுமான வழிமுறைகளைக் காட்டுகின்றன.
செயல்சார்ந்த சமூகப் பணியென்பது, பிராய்ட் பரிந்துரைத்த பிரச்சனையின் விரிவான வரலாறு, நோயறிதல் முறைகளுக்கு அதிக முக்கியத்துவம் தராமல், ஒரு சமூகப்பணியாளரோ, சமூக சேவை நிறுவனமோ ஒரு பிரச்சனைக்கான தீர்வில் எப்படி பரீட்சார்த்தமாகச் செயல்பட்டு அதைத் தீர்க்கலாம் என்ற செயல்சார்ந்த வழிமுறைகளைக் கையாண்டனர். இதுவே செயல்சார்ந்த சமூகப் பணி ஆயிற்று.

English

The theoretical and practice orientation in social work based on the ideas of University of Pennsylvania School of Social Work educators Virginia Robinson (1883-1977) and Jessie Taft (1882-1960) and their colleague psychoanalyst Otto Rank (1884- 1937). Also known as the functional school in social work or the Rankian School, the approach de-emphasized diagnostic inquiry, history taking, and Freudian theory and stressed a strategy that was time limited and focused on those issues that came within an agency's function.