pension
ஓய்வுகால ஊதியம், உரிமை துறப்புக்கீடான உதவிச்சம்பளம், பரிவூதியம், துணைமை ஊதியம், அன்புதவி, ஓய்வு ஊதியம், பதவி ஓய்வுக்கால சம்பளம், ஒருவர் உத்தியோகத்தை விட்டபிறகு அவர்க்கு உதவும் உபகாரச் சம்பளம், சம்பளத்தில் பாதியாகப் பெறும் உபகாரவேதனம்
தமிழ் விளக்கம்
ஓய்வூதியம் (pension) என்பது, அரசுத்துறையில் வயது முதிர்வு காலம்வரை நிறைவளிக்கத்தக்க வகையில் பணிபுரிந்து தங்கள் பணியை நிறைவு செய்த ஊழியர்களுக்கு, ஓவ்வொரு மாதமும் அரசாங்கம் வழங்கும் தொகை ஆகும். அரச ஊழியர் ஒருவர் பணியிலிருந்து ஓய்வுபெறும் காரணம், சட்டரீதியான விதிகளின் கீழ் ஓய்வுபெறுதல் மற்றும் அவருடைய மொத்த பணிக்காலம், ஆகிய தன்மைகளின் அடிப்படையில் பல்வேறு வகையான ஓய்வூதிய வகைகளை ஓய்வூதிய விதிகள் அளிக்கின்றன. இந்தியாவில் அரசு ஊழியர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், உள்ளாட்சி நிறுவனங்களின் ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள், வயது மூப்பின் காரணமாக ஓய்வு / விருப்ப ஓய்வு / கட்டாய ஓய்வு / கொடிய நோயால் நிரந்தரமாகப் பணி செய்ய இயலாமை காரணமாக ஓய்வு பெறும்போது, அவர்களது பொருளாதார நலனை ஈடுகட்டும் வகையில் அவர்களுக்கு அரசு மாதாமாதம் ஒருதொகையை ஓய்வூதியமாக வழங்குகிறது. ஓய்வூதிய விதிகளின்படி, ஊழியர் / ஆசிரியர் பணிபுரிந்த காலத்தையும், கடைசியாகப் பெற்ற ஊதியத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஓய்வூதியம் கணக்கிடப்படும். ஊழியர்கள் / ஆசிரியர்கள் மீது குற்ற வழக்குகள் மற்றும் கடுமையான குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தாலோ அல்லது நீதிமன்றத்தால் குற்ற வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு இருந்தாலோ ஓய்வூதிய விதிகளின்படி அவர்களின் ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படும். ஓய்வு பெற்ற பின்னரும் ஒரு அரசு ஊழியர் மத, இன, சாதி அமைப்பிலான எந்த அமைப்பிலும் தொடர்பு கொண்டு நாட்டின் அமைதிக்கும், உடமைக்கும், உரிமைக்கும் பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடாதவராக இருக்க வேண்டும். ஓய்வு பெறும் ஒரு ஊழியர் அரசுக்கோ அல்லது அரசு சார்புடைய நிறுவனத்திற்கோ இழப்பு உருவாக்குபவராக இருக்கக் கூடாது. அவ்வாறு இழப்பு ஏற்படுத்தும் நிகழ்வில் அவர் இழப்பை ஈடுசெய்ய வேண்டும். ஓய்வுதியம் பெறுபவர் ஓய்வுக்குப் பின்னர் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவாராயின் அவருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நிறுத்தப்படும். (தமிழ்நாடு அரசு ஓய்வூதிய விதிகள்).
ஓய்வூதிய வகைகள் 1. வயது முதிர்வு ஓய்வூதியம் 2. விருப்ப ஓய்வூதியம் 3. கட்டாய ஓய்வூதியம் 4. இயலாமை ஓய்வூதியம்
புதிய ஓய்வூதியத் திட்டம் - 01-01-2004 முதல் அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கும் (இந்திய அரசின் முப்படையில் சேர்ந்தவர்கள் தவிர), தமிழ்நாடு அரசில் 01-04-2003 முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டப் படி ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
ஓய்வூதிய வகைகள் 1. வயது முதிர்வு ஓய்வூதியம் 2. விருப்ப ஓய்வூதியம் 3. கட்டாய ஓய்வூதியம் 4. இயலாமை ஓய்வூதியம்
புதிய ஓய்வூதியத் திட்டம் - 01-01-2004 முதல் அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கும் (இந்திய அரசின் முப்படையில் சேர்ந்தவர்கள் தவிர), தமிழ்நாடு அரசில் 01-04-2003 முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டப் படி ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
English
A payment made regularly to an individual because of retirement, age, loss, or incapacitating injury or to dependents in the event of the beneficiary's death. Social security benefits as well as retirement income provided by employers are generally considered to be forms of pensions.