People for the Ethical Treatment of Animals (PETA)
பிராணிகளைக் கருணையுடன் கையாள வற்புறுத்தும் மக்களமைப்பு
தமிழ் விளக்கம்
கல்வியின் மூலமாகவும், பிரச்சாரத்தின் மூலமாகவும் பிராணிகளைக் கருணையுடன் கையாள, மிருக வதையைத் தடுக்க, தேச மற்றும் சர்வதேச அளவில் செயல்பட்டுவரும் தொண்டு நிறுவனம். இந்த அமைப்பினர் விலங்குகளைப் பரிசோதனைக்கு பயன்படுத்தும் ஆராய்ச்சிக் கூடங்களுக்கு எதிராகவும், விலங்குகளைப் பயன்படுத்தி கம்பளி ஆடை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராகவும், இறைச்சி பதப்படுத்தும் ஆலைகளுக்கு எதிராகவும், ஆர்ப்பாட்டத்திலும் போராட்டத்திலும் ஈடுபட்டிருக்கின்றார்கள்.
English
A national and international nongovernment organization working to protect animals from abuse, primarily through education and publicity. PETA also has engaged in militant actions directed at research labs that experiment with animals, furriers, meat-packing plants, and industries using animal products.