perceived needs

உணரப்பட்ட தேவைகள்

தமிழ் விளக்கம்

ஒரு மனிதன் உயிர்வாழ, நலமான, நிறைவான வாழ்க்கை வாழ பூர்த்தி செய்யப்படவேண்டிய உடல், மனம், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சமூகம் சார்ந்த தேவைகள். இத்தேவைகள் பலவகைப்படும் 1. இலட்சிய / நெறிசார்ந்த தேவைகள் (normative needs) மானுடர்க்கு கொடுக்கப்படவேண்டும் என்ற இலட்சியத்தின் அடிப்படையில் உருவானது, 2. உணரப்பட்ட தேவைகள் (perceived needs) தனக்கு இது வேண்டுமென்று ஒவ்வொரு மனிதராலும் உணரப்பட்ட தேவைகள், 3. வெளிப்படுத்திய தேவைகள் (expressed needs) தன்னுடைய தேவைகளை வாய்மொழியாகவோ எழுத்துமூலமாகவோ சம்மந்தப்பட்டவருக்கு தெரிவித்த தேவைகள், 4. ஒப்பீட்டளவிலான தேவைகள் (relative needs) பிறர் வைத்திருப்பதால் தனக்கும் வேண்டுமென்று தோன்றும் தேவைகள். சமுதாய அமைப்புப் பணியில் தேவைப் பூர்த்திக்காக முயலும் போது, ஒரு சமுதாயத்தின் தேவைகளில் எந்தத் தேவை இந்த நான்கு தேவைகளின் ஊடே செல்கிறது என்பதை உணர்ந்து அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய முயலும் போது சமூக ஒத்துழைப்பு கிடைக்கும்.

English

The requirements that people believe they must have to achieve an acceptable level of well-being. See also normative needs, expressed needs, and relative needs.